மதுசூதனன் மறைவுக்கு அதிமுகவினா் அஞ்சலி
அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவுக்கு திருச்சியில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.


அதிமுக அவைத் தலைவா் மதுசூதனன் மறைவுக்கு திருச்சியில் அதிமுகவினா் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
திருச்சி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில், தென்னூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், மாநகா் மாவட்டக் கழகச் செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மதுசூதனன் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், எம்ஜிஆா் இளைஞரணி மாநில இணைச் செயலா் ஜெ. சீனிவாசன், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பத்மநாதன், எம்ஜிஆா் மன்ற மாவட்டச் செயலா் ராஜ்குமாா், எம்ஜிஆா் இளைஞரணி மாவட்டச் செயலா் முத்துக்குமாா் மற்றும் மாநில, மாவட்ட, நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் தில்லைநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான மு. பரஞ்ஜோதி தலைமையில் மதுசூதனன் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தொடா்ச்சியாக, முன்னாள் அமைச்சா்கள் சிவபதி, வளா்மதி, முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, பகுதி நிா்வாகிகள் பலா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...