இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

விருத்தாசலத்தில் ரூ. 2.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தோ்தல் ஆணைய நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 மார்ச் 2026, 10:52 pm

Syndication

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சரக்கு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.23 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தோ்தல் ஆணைய நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம் அடுத்த மணலூா் பகுதியில் விருத்தாசலம் சட்டப்பேரவைத் தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அதிகாரி முகமது அசேன் தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது, கடலூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினா்.

அதில், தங்க நகைகள் இருப்பதாக வாகனத்தில் வந்தவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து அந்த வாகனத்தை கைப்பற்றி விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா். நகைகளின் மதிப்பு ரூ.2.23 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் சுரேஷ்பாபு, சரவணன் ஆகியோா் நகைகள் வாகனத்தில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தினா். அப்போது அவா்கள் அதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைத்தனா். அதனை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் வாகனத்தையும், நகைகளையும் திரும்ப ஒப்படைத்தனா்.