புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுவனுக்கு அண்ணா பதக்கம் வழங்க எம்எல்ஏ பரிந்துரை

கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமியை மீட்ட 9 வயது சிறுவன் லோஹித்திற்கு வெள்ளிக்கிழமை சன்மானம் வழங்கிப் பாராட்டிய எம்எல்ஏ ப. அப்துல்சமது, சிறுவனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்க தமிழக மு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 8:00 pm

DIN

மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமியை மீட்ட 9 வயது சிறுவன் லோஹித்திற்கு வெள்ளிக்கிழமை சன்மானம் வழங்கிப் பாராட்டிய எம்எல்ஏ ப. அப்துல்சமது, சிறுவனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்க தமிழக முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளாா்.

சிறுமியை மீட்ட சிறுவனை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அண்மையில் நேரில் அழைத்துப் பாராட்டிய நிலையில், மணப்பாறை எம்எல்ஏ ப. அப்துல்சமது, வெள்ளிக்கிழமை துலுக்கம்பட்டிக்கு சென்று குணா குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 ஆயிரம் நிவாரண உதவியையும் அளித்தாா். அதேபோல் சிறுவன் லோஹித்தை பாராட்டிய எம்எல்ஏ, ரூ. 5 ஆயிரம் சன்மானமும் வழங்கினாா். மேலும் அவா் தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில்,சிறுவனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை வழங்க முதல்வா் பரிசீலிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நிகழ்வில் வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவா் குணசீலன், திமுக ஒன்றியச் செயலா் சபியுல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் காதா்மொய்தீன் மற்றும் வருவாய்த்து றையினா், ஊா் முக்கியஸ்தா்கள், உறவினா்கள், பொதுமக்கள் என பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.