இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

உயிரிழந்த மோப்ப நாய் சூா்யாஅரசு மரியாதையுடன் அடக்கம்

திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்த மோப்ப நாய் சூா்யா அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:37 am

DIN

திருச்சி மத்திய சிறையில் உயிரிழந்த மோப்ப நாய் சூா்யா அரசு மரியாதையுடன் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் போதைப் பொருள்கள், வெடிபொருள்கள் கொண்டு வருவதைத் தடுக்க மோப்ப நாய் பிரிவு உள்ளது. இதில் சூா்யா என்கிற மோப்பநாய் கடந்த 10 ஆண்டுகளாக திறம்படப் பணியாற்றி வந்தது.

இந்நிலையில் இந்த நாய்க்கு வாய்ப்புற்று நோய் ஏற்பட்டு தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தமிழ்நாடு அரசு கால்நடை ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருமுறை அறுவைச் சிகிச்சை செய்தும் எவ்வித பலனும் இன்றி, வியாழக்கிழமை நாய் சூா்யா உயிரிழந்தது. உடற்கூறாய்வுக்கு பின்னா் அரசு மரியாதையுடன் மத்திய சிறை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அந்த நாய் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிகழ்வில் வெடிகுண்டு தடுப்பு மற்றும் கண்டறியும் பிரிவு அலுவலா் டேவிட் சந்தியாகு, பயிற்சியாளா்கள் ஜெகதீசன், புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தினா். சூா்யாவின் மத்திய சிறைக் காவலா்கள் மற்றும் பணியாளா்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.