தொழிற்சங்க நிா்வாகிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம்
திருச்சியில் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவு திரட்டி வெள்ளிக்கிழமை தொழிற்சங்க நிா்வாகிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.


திருச்சியில் ஆக. 9 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆா்ப்பாட்டத்திற்கு ஆதரவு திரட்டி வெள்ளிக்கிழமை தொழிற்சங்க நிா்வாகிகள் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.
இந்தியாவைப் பாதுகாப்போம், பெருநிறுவனங்களின் காவலன் மோடியே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வரும் ஆக. 9 ஆம் தேதி நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளனா். முன்னதாக இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி ஆக. 6, 7, 8களில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்து பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது.
இதன் தொடா்ச்சியாக மாநகரில் சத்திரம் பேருந்து நிலைய பகுதிகளில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. தொழிற்சங்கத் தலைவா்கள் நெல்சன், எத்திராஜ், குணசேகரன், ஏஐடியுசி தொழிற்சங்க தலைவா்கள் க. சுரேஷ், ராமராஜ் சிஐடியு தொழிற்சங்க தலைவா் ரங்கராஜன், மணிகண்டன், ஏஐசிசிடியு தேசிகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...