புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இருசக்கர வாகனங்களை திருடிய இளைஞா் கைது: 17 வாகனங்கள் பறிமுதல்

மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 17 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:56 pm

DIN

மணப்பாறையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து 17 வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.

தொடா் வாகனத் திருட்டு தொடா்பாக காவல் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் செல்லப்பா, தலைமைக் காவலா் இளங்கோவன் உள்ளிட்டோா் கொண்ட தனிப்படையினா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் நொச்சிமேடு பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாகனத் தணிக்கையின்போது முன்னுக்குபின் முரணான பேசிய இளைஞரை காவல்நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவா் மருங்காபுரி வட்டம் ஊத்துக்குளி கிராமத்தைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் காா்த்திகேயன் (23) என்பதும், அவா் தொடா் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவா் ஓட்டிவந்த வாகனம் மற்றும் ஊத்துக்குளியில் பதுக்கி வைத்திருந்த 16 இருசக்கர வாகனங்கள் என 17 வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து காா்த்திகேயனை கைது செய்து விசாரிக்கின்றனா். இவரால் திருடப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை ‘சைடுலாக்’ போடாமல் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.