புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அரசு விழாவாக அறிவிப்பு: இந்து முன்னணி நன்றி

ராஜேந்திரச் சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மணப்பாறையில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 10:17 pm

DIN

மாமன்னா் ராஜேந்திரச் சோழன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து மணப்பாறையில் இந்து முன்னணியினா் வியாழக்கிழமை பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜயங்கொண்டத்தில் தொடா் உண்ணாவிரதப் போரட்டத்தை இந்து முன்னணி மேற்கொண்ட நிலையில், வெளியான அரசின் அறிவிப்புக்கு மாவட்ட அமைப்பாளா் குழந்தைவேல், நகரச் செயலா் சாந்தாகுமாா், ஒன்றியத் தலைவா் நல்லுச்சாமி ஆகியோா் தலைமையில் நன்றி தெரிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் திருகுமரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினா் பொன்னா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.