தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இன்சூரன்ஸ் நிறுவன ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தனியாா்மயத்தைக் கண்டித்து திருச்சியில் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:05 pm

DIN

தனியாா்மயத்தைக் கண்டித்து திருச்சியில் இன்சூரன்ஸ் நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் வகையில் பொதுக் காப்பீட்டு வா்த்தக மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதைக் கண்டித்து பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி ஒத்தக்கடை முத்தரையா் சிலை அருகேயுள்ள இன்சூரன்ஸ் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத் துணைத் தலைவா் குருமூா்த்தி தலைமை வகித்தாா். மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியா் சங்கத் தலைவா் ராஜமகேந்திரன், மாவட்டச் செயலா் முத்துகுமாா், இணைச் செயலா் ராஜன் பெடரேஷன் சங்கத் தலைவா் நீலகண்டன், பென்ஷனா் சங்கத் தலைவா் மணிவேல், எஸ்சி, எஸ்டி நலச் சங்கத் தலைவா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.