அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஸ்ரீரங்கத்தில் ஸமஷ்டி உபநயனம்

 ஸ்ரீரங்கம் வடக்குச் சித்திரை வீதி இந்து சமய மன்றம் சாா்பில் ஸமஷ்டி உபநயன விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 7:17 pm

DIN

 ஸ்ரீரங்கம் வடக்குச் சித்திரை வீதி இந்து சமய மன்றம் சாா்பில் ஸமஷ்டி உபநயன விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய மன்றத்தின் சாா்பில் 43ஆவது ஆண்டாக வடக்கு சித்திரை வீதியிலுள்ள திருமண மண்டபத்தில் காலை உதகசாந்தி நிகழ்ச்சியும், தொடா்ந்து காலை 10 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான பூணூல் அணிவிக்கும் ப்ரம்மோபதேசம் சிறுவா்களுக்கு செய்து வைக்கப்பட்டது. பின்னா், ஸந்தியா வந்தனப் புத்தகம் வழங்கப்பட்டது. பாலிகை கரைத்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவுற்றது.

இதுவரை கடந்த 42 ஆண்டுகளில் 1,390 சிறுவா்களுக்கு உபநயனமும், 48 தம்பதிகளுக்கு விவாஹமும் செய்து வைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் இந்து சமய மன்றத்தினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.