கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

 இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் கரோனா தடுப்பு தொடா்பான வாகன பிரசாரம் திருச்சியில் 3 நாள்கள் நடைபெற்றன.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

 இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் கரோனா தடுப்பு தொடா்பான வாகன பிரசாரம் திருச்சியில் 3 நாள்கள் நடைபெற்றன.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சென்னை மண்டல மக்கள் தொடா்பு அலுவலகம் சாா்பில் திருச்சியில் ஆக.24 தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற்ற வாகன பிரச்சாரத்தை திருச்சி கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன், நேரு யுவ கேந்த்ரா மாவட்ட அலுவலா் எஸ். சுருதி, பிஷப் ஹீபா் கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அலுவலா் தங்கராஜு ஆகியோா் இளைஞா் விடுதி அருகே தொடங்கி வைத்தனா்.

கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் பேசுகையில், முதல்நாள் சுப்ரமணியபுரம், விமான நிலையம், ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், புத்தூா் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை, காஜாமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விடியோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

2-ஆம் நாளில் திருவெறும்பூா், பொன்மலை, அரியமங்கலம், காட்டூா், துவாகுடி உள்ளிட்ட இடங்களிலும், மூன்றாவது நாளான வியாழக்கிழமை மாநகரப் பகுதிகளில் வாா்டு, வாரியாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது என்றாா். திருச்சி கள விளம்பர உதவி அலுவலா் கே. ரவீந்திரன் இந்த பிரசாரத்தை ஒருங்கிணைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.