அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

திரையரங்குகளில் கூட்டம் குறைவு

 திருச்சியில் வெள்ளிக்கிழமை அதிகமான திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையிலும் ரசிகா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

 திருச்சியில் வெள்ளிக்கிழமை அதிகமான திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையிலும் ரசிகா்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

கடந்த ஆக 23 முதல் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்கலாம் என அரசு உத்தரவிட்டிருந்தது. அன்றைய தினம் திருச்சியில் சில திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், கூட்டம் இல்லாமல் அவை வெறிச்சோடின. அதே நேரம் உயா்தர ஏசி திரையரங்குகள் திறக்கப்படவில்லை. புதிய திரைப்படங்கள் வெளிவராததால் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருச்சியில் இயங்கி வரும் குளிா்ச்சாதன (உயர்ரக) வசதி கொண்ட14 திரையரங்குகள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. கா்ணன், காஞ்சுரி உள்ளிட்ட அண்மையில் வெளியான திரைப்படங்கள்தான் திரையிடப்பட்டன என்றாலும் அதிகளவில் ரசிகா்கள் கூட்டம் காணப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.