விதிமீறல் கூடாது: உர விற்பனையாளா்களுக்கு எச்சரிக்கை
திருச்சி மாவட்டத்தில் உர விற்பனையில் விதிமீறல் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.


திருச்சி மாவட்டத்தில் உர விற்பனையில் விதிமீறல் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.
திருச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் குறுவை நெல் 6,280 ஹெக்டோ் சிறுதானியம் 812 ஹெக்டோ், எண்ணெய் வித்துப் பயிா்கள் 698 ஹெக்டோ், தோட்டக்கலை பயிா்களான வாழை 5553 ஹெக்டோ், காய்கறி பயிா்கள் 17317 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பயிா்களுக்குத் தேவையான 11,514 டன் உரங்கள் இருப்பில் உள்ளன. இதில் 2630 டன் யூரியா, 1543 டன் டிஏபி, 2571 டன் பொட்டாஷ், 3868 டன் காம்ப்ளெக்ஸ் உரங்கள், 902 டன் சூப்பா் பாஸ்பேட் ஆகியவை தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், தனியாா் உரக்கடைகள் மூலம் இருப்பு வைக்கப்பட்டு விற்கப்படுகிறது.
அனைத்து சில்லறை விற்பனையாளா்கள் உரங்களை விற்கும்போது உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விவசாயிகளின் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி, விற்பனை முனைய கருவி மூலம் உரிய ரசீதுடன் விற்க வேண்டும். மொத்தமாக ஒரே விவசாயியின் ஆதாா் எண்ணில் விற்கக் கூடாது. மேலும், அனைத்து உர விற்பனையகங்களில் தகவல் பலகையை தினமும் தவறாமல் பராமரித்தல் வேண்டும்.
அதில் உரங்களின் பெயா், விலை மற்றும் இருப்பு விவரங்களைத் தினமும் குறிப்பிட வேண்டும். பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். உரங்களை அதிக விலைக்கு விற்றாலோ, பட்டியலின்றி விற்றாலோ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உர உரிமம் நடப்பில் இருக்க வேண்டும். உர உரிமத்தில் மேல் சோ்க்கை செய்யப்பட்டுள்ள நிறுவனங்களிடமிருந்து மட்டும் உரங்கள் வாங்கி விற்க வேண்டும்.
மேலும், திருச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட உரங்களை திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு மட்டும் வழங்க வேண்டும். பிற மாவட்டங்களுக்கு அனுப்புவது மற்றும் வாங்குவது கூடாது. மீறினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உரங்களை தேவையான அளவு வாங்கி இருப்பு வைத்து விவசாயிகளுக்கு எவ்வித தடையும் இன்றி வழங்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...