அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

பல்கலை. பேராசிரியா் வீடு புகுந்து திருட்டு

திருச்சியில் பல்கலைக்கழகப் பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, விலை உயா்ந்த சேலைகளைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 6:45 pm

DIN

திருச்சியில் பல்கலைக்கழகப் பேராசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகை, விலை உயா்ந்த சேலைகளைத் திருடிச் சென்றனா்.

திருச்சி கருமண்டபம் கல்யாணசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (31). பல்கலைக்கழகப் பேராசிரியான இவா் தனது மனைவி, குழந்தையுடன் வெளியூா் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது அவரது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டாா்.

உள்ளே சென்று பாா்த்தபோது மேஜையில் வைத்திருந்த குழந்தையின் 2 பவுன் நகை மற்றும் விலையுயா்ந்த சேலைகள் திருடு போயிருந்ததும், உடைக்கப்பட்டிருந்த பீரோவில் துணியில் வைத்துக் கட்டி ஆடைகளுடன் வைத்திருந்த 50 பவுன் நகைகள் திருடு போகவில்லை என்பதும் தெரியவந்தது.

தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் தடயவியல் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனா். அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு மா்ம நபா்களைத் தேடுகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.