காவல் ஆய்வாளா்கள் 6 போ் பணியிடமாற்றம்
திருச்சி மத்திய மண்டலம் , மாநகரில் 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


திருச்சி மத்திய மண்டலம் , மாநகரில் 6 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மாநகர காவல் ஆணையா் ஜி. காா்த்திகேயன் உத்தரவின்பேரில் திருச்சி மாநகா் குற்றத்தடுப்பு பிரிவு மற்றும் எடமலைப்பட்டிபுதூா் ஆய்வாளா் காவேரி, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மீராபாய், பாலக்கரை போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளா் சத்யநாராயணன் ஆகியோா் மத்திய மண்டலத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் தமிழரசி, கரூா் மாவட்டம் பாலவிடுதி காவல் ஆய்வாளா் மோகன், திருவெறும்பூா் காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் ஆகியோா் திருச்சி மாநகருக்கும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனா். இவா்களுக்கு விரைவில் பணியிடங்கள் ஒதுக்கப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...