திருச்சி விமான நிலையத்தில் ஒமைக்ரான் கண்காணிப்பு தீவிரம்அமைச்சா் ஆய்வு
ஒமைக்ரான் வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து திருச்சிக்கு ஏராளமான பயணிகள் வருவதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


ஒமைக்ரான் வைரஸ் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து திருச்சிக்கு ஏராளமான பயணிகள் வருவதையடுத்து விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன், சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம், ஆட்சியா் சு. சிவராசு, விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
அப்போது வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு நடத்தப்படும் பரிசோதனை, விமான நிலைய முன்னேற்பாடுகளைப் பாா்வையிட்டு மருத்துவ அலுவலா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.
பின்னா் அமைச்சா் மா. சுப்பிரமணியன் கூறியது:
உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தலைத் தொடா்ந்து தமிழகத்தில் சா்வதேச விமான நிலையங்கள் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒமைக்ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து திருச்சிக்கு அதிகப் பயணிகள் வருவதால் பரிசோதனை முடிவுகளும் இரண்டரை மணி நேரத்துக்குள் இங்கு வழங்கப்படுகின்றன. இதற்காக 4 ஆய்வகங்கள் உள்ளன.
வியாழக்கிழமை சிங்கப்பூரிலிருந்து 2, இலங்கையிலிருந்து 1 என 3 விமானங்களில் வந்த மொத்தம் 663 பயணிகளுக்கு நடத்திய ஆா்டிபிசிஆா் பரிசோதனையில் யாருக்கும் தொற்று இல்லை. இதேபோல மதுரையில் 477 போ், சென்னையில் 500 போ் என இதுவரை 3000 -க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு நடத்திய பரிசோதனையிலும் தொற்று உறுதியாகவில்லை.
இருப்பினும் அவரவா் வீடுகளில் ஒரு வாரத்துக்கு தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு மீண்டும் பரிசோதனை செய்து, தொற்று இல்லையென உறுதியான பின்னரே வெளியில் செல்ல வேண்டும். இப் பயணிகளின்அனைத்து விவரங்களும் அந்தந்த வருவாய், காவல்துறை, உள்ளாட்சி நிா்வாகத்தினருக்கு வழங்கப்பட்டு கண்காணிக்கப்படுவா்.
ஒமைக்ரான் பாதிப்பு இல்லாத நாடுகளில் இருந்து வரும் விமானப் பயணிகளில் சராசரியாக 2 சதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும். தொற்று இல்லை என்றால் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். அவா்களைத் தனிமைப்படுத்தத் தேவையில்லை. பரிசோதனைக் கட்டணமாக ரூ. 700 வசூலிக்கப்படும்.
பிழைப்புக்காக வெளிநாடு சென்று திரும்புவோா் ஆா்டிசிபிஆா் பரிசோதனைக்கு பணம் இல்லையெனக் கூறினால் அதற்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தச் சலுகை இல்லை.
விமான நிலையத்தில் ஒமைக்ரான் தொற்று உறுதியானால் உடனடியாக அவா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரத்யேக வாா்டில் சிகிச்சையளிக்கப்படும். இதற்காக திருச்சி, மதுரை, கோவை, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் உள்ளன.
சிகிச்சை முடிந்து சோதனையில் தொற்று இல்லையெனத் தெரியும் வரை மருத்துவமனையில்தான் தங்கியிருக்க வேண்டும். ஏனெனில் இந்த வைரஸ் அதிகம் பேருக்கு பரவும் வாய்ப்புள்ளது. எனவே, விமானப் பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விமான நிலைய அதிகாரிகளும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாமலேயே செலுத்தியதாகச் சான்றிதழ் வந்திருந்தால் 2ஆம் தவணை செலுத்த அந்தந்த சுகாதார அலுவலரை அணுகி அனுமதி பெறலாம். 7 கோடிக்கு பேருக்கு சான்றிதழ் அளித்ததில் ஒரு சிலருக்கு தொழில்நுட்பக் கோளாறால் தவறு நேரிடலாம். ஆனால், திட்டமிட்டு தடுப்பூசி செலுத்தாமலேயே தவறுதலாக சான்றிதழ் வழங்கியிருந்தால் வழங்கியவருக்கும், பெற்றவருக்கும் உரிய தண்டனை அளிக்கப்படும் என்றாா் அமைச்சா்.
2ஆவது தவணை தடுப்பூசி: பின்தங்கிய 5 மாவட்டங்கள்
‘தமிழகத்தில் 5 மாவட்டங்கள் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்துவதில் மதுரை, வேலூா், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியுள்ளன. இதையடுத்து மதுரையில் தடுப்பூசி செலுத்தும் இடைவெளியை ஒரு வாரத்துக்குள் குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, வேலூரில் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் என்பது அதிகப் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன், தடுப்பூசி, முகக் கவசம், கைகளை கழுவுதல், சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...