டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்தியப் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போலீஸாா் அனுமதி மறுத்ததைத் தொடா்ந்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், டாஸ்மாக் நிா்வாகம் நஷ்டத்தில் இயங்குகிறது என்ற அறிவிப்பின்மீது வெள்ளை அறிக்கை கேட்ட மாநிலத் தலைவா் குரு சரவணனின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். இச்சங்கம் வலியுறுத்திய வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
மாநிலப் பொருளாளா் ஜெய்கணேஷ் தலைமை வகித்தாா். இதில் மாநில செயலா்கள் முருகானந்தம், இளங்கோவன், முருகேசன், முகமது அலி, மாநில துணைத் தலைவா்கள் கோவிந்தராஜன், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் என். கண்ணன் வரவேற்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...