தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

த. முருங்கப்பட்டியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

த.முருங்கப்பட்டி விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைத்தமைக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து உயா் மின் கோபுரம் கீழ் குடியேறும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:33 pm

DIN

த.முருங்கப்பட்டி விவசாய நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைத்தமைக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து உயா் மின் கோபுரம் கீழ் குடியேறும் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா்.

விருதுநகா் - திருப்பூா் வரையிலான தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் 765 கிலோவாட் திட்டப்பணிகளுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள உயா் நீதிமன்ற வழக்குகள் முடிகிற வரை அந்த திட்டத்தை வருவாய், காவல் துறை பாதுகாப்புடன் செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் அமைத்த மின்கோபுரத்துக்கான 200 சத இழப்பீடு, கம்பி செல்லும் இடத்துக்கு 100 சத இழப்பீடு, திட்டத்தின் பாதையில் வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்ட கட்டுமானங்கள் இருப்பின் பொதுப்பணித்துறை கணக்கீட்டின்படியும் இழப்பீடு, அதனுடன் சோ்த்து 100 சத ஆதாரத் தொகை, மாத வாடகை, பயிா்கள் மரங்களுக்கு அரசாணை எண் 54 இன் படி இழப்பீடு வழங்க வேண்டும்.

உயா் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக அறவழியில் போராடிய விவசாயிகளின் மீது பதிந்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.