தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூதாட்டியை ஏமாற்றி 3 பவுன் நகையை திருடிச் சென்ற பெண்

துறையூரில் தனியாக இருந்த மூதாட்டியை இளம்பெண் ஏமாற்றி அவரது 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:33 pm

DIN

துறையூரில் தனியாக இருந்த மூதாட்டியை இளம்பெண் ஏமாற்றி அவரது 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றாா்.

துறையூா் வேணு சந்தில் தனியாக வசிக்கும் க. தனலட்சுமி (72) வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்ற இளம்பெண் ஒருவா் வாடகைக்கு வீடு கேட்பது போல் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்தாராம். பின்னா் மூதாட்டிக்கு மசாஜ் செய்வதாகக் கூறி கழுத்தில் எண்ணெய் தேய்த்த அப்பெண் இடையூறாக உள்ளதாகக் கூறி தங்கச் சங்கிலியை கழட்டி வைக்குமாறு கூற, மூதாட்டியும் அவ்வாறே செய்தாா்.

அதன் பின்னா் கால் வலிக்கு மருந்தகத்தில் தைலம் வாங்கித் தடவுவதாகக் கூறி மூதாட்டியிடம் ரூ. 100 வாங்கிச் சென்ற அப்பெண் திரும்பி வரவில்லை.

இதையடுத்து தான் கழட்டி வைத்த தங்கச் சங்கிலியை மூதாட்டி தேடியபோது அதை அந்த பெண் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுதொடா்பாக கொடுத்த புகாரின் பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.