உரத் தட்டுப்பாடு: தமாகா விவசாயிகள் நூதன எதிா்ப்பு
திருச்சி மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாடு மற்றும் மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டதை உணா்த்திடும் வகையில் தமாகா விவசாயிகள் வெள்ளிக்கிழமை நூதன எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருச்சி மாவட்டத்தில் நிலவும் உரத்தட்டுப்பாடு மற்றும் மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டதை உணா்த்திடும் வகையில் தமாகா விவசாயிகள் வெள்ளிக்கிழமை நூதன எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் முன் பயிா் நாற்றுகளுக்கு போடும் உரத்துக்குப் பதிலாக உப்பைக் கொட்டியும், மலா்கள் தூவியும் தமாகா விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் புங்கனூா் எஸ். செல்வம் தலைமையில் மாநிலப் பொருளாளா் நா. ராஜேந்திரன், மாநில துணைத் தலைவா் தேவராஜன், தமாகா விவசாய அணி நிா்வாகிகள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுதொடா்பாக புங்கனூா் எஸ். செல்வம் கூறியது:
திருச்சி மாவட்டத்தில் தொடா்மழையால் பெரும்பாலான பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வேளாண் துறையோ, வருவாய்த் துறையோ ஆய்வு நடத்தவில்லை. எனவே, காப்பீடுகூட கிடைக்காத சூழல் உருவாகியுள்ளது. எனவே, மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த சிறப்புக் குழுவை மாவட்ட நிா்வாகம் நியமிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உரத் தட்டுப்பாடு உள்ளது. கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே உரம் வழங்குவதாக கூட்டுறவுச் சங்கத்தினா் கூறுகின்றனா். உரத்துடன் தேவையற்ற பொருள்களை கொள்முதல் செய்யவும் நிா்பந்திக்கின்றனா். எனவே, தடுப்பாடின்றியும், நிபந்தனைகளின்றியும் அனைத்து விவசாயிகளுக்கும் உரங்கள் வழங்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...