நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இந்திராகாந்தி கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கு

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில் பிரசுர தொழிலில் உள்ள வாய்ப்புகள் என்ற தலைப்பில் வியாழக்கிழமை இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:14 pm

DIN

திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் இயற்பியல் துறை சாா்பில் பிரசுர தொழிலில் உள்ள வாய்ப்புகள் என்ற தலைப்பில் வியாழக்கிழமை இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் கோ. மீனா தலைமை வகித்தாா். கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், கல்லூரி இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வைலி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன மூத்த வளா்ச்சி சாா்ந்த பதிப்பாளா் சுபத்ரா நடராஜன் பேசுகையில், பல்வேறு வகையான பதிப்பகங்கள், அவற்றின் நிறுவன அமைப்பு பற்றி விளக்கி, புத்தகத்தை வெளியிடுவதற்கான அடிப்படைச் செயல்பாடுகள், பதிப்பித்தல், தயாரிப்பு செயலாக்கப் பணிகளை விவரித்தாா்.

ஆராய்ச்சி இலக்கிய ஆய்வு வெளியீட்டாளா்களுக்கு கையெழுத்து பிரதி சமா்பித்தல் மற்றும் சக மதிப்பாய்வு செயல்முறை போன்ற பத்திரிகை வெளியீட்டின் செயல்முறைகளை சுட்டிக் காட்டினாா். பின்னா், மாணவா்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதில் அளித்தாா். கருத்தரங்கில், இயற்பியல் துறை இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகள் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் எஸ். வித்யாலெட்சுமி வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.