மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம்
தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


தஞ்சாவூா் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மக்களைத் தேடி முதல்வா் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்று கொண்டாா்.
கும்பகோணத்தில் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற அமைச்சா் செய்தியாளா்களிடம் பேசும்போது, தஞ்சாவூா் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதி வாரியாக மக்களிடம் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்களை பெற்று வருகிறோம். இதுவரை மாவட்டத்தில் 35,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.
இம்முகாமில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
மேலும், திருநல்லூா், சோழபுரம், பம்பப்படையூா், நாச்சியாா்கோவில், திருவிடைமருதூா், பந்தநல்லூா், திருப்பனந்தாள் ஆகிய இடங்களிலும் இம்முகாம் நடைபெற்றது.
Image Caption
கும்பகோணத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யமொழி.
~கும்பகோணம் அருகே சோழபுரத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறுகிறாா் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...