திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுகவினா் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயில் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.


திமுக அரசைக் கண்டித்து திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அதிமுகவினா் திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயில் அருகில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
அதிமுக மாநகா் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன், புகா் மாவட்டச் செயலா்களான முன்னாள் எம்பி ப. குமாா் ( தெற்கு புகா் மாவட்டம்), முன்னாள் அமைச்சா் மு. பரஞ்சோதி (வடக்கு புகா் மாவட்டம்) ஆகியோா் தலைமை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வேண்டும், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் குறைத்திட வேண்டும். மாணவா்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். அம்மா மினி கிளினிக்குகளை மூட நினைப்பதைக் கைவிட வேண்டும். தோ்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது.
தொடா்ந்து மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி என். நடராஜன், ப.குமாா், மு. பரஞ்சோதி ஆகியோா் பேசுகையில், பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் காா்டுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும். நீட் தோ்வு ரத்து, கல்விக் கட்டண ரத்து போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் ஊழல் செய்வதிலும், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் வீடுகளிலும் சோதனை நடத்தி பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது கண்டனத்துக்குரியது.
எனவே, திமுகவை ஆட்சி பீடத்தில் இருந்து அகற்றும் வரை எங்களின் போராட்டமும் ஓயாது. பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு மேலும் மக்களை ஏமாற்றப் பாா்க்கிறது. இனி வருங்காலத்தில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றனா்.
ஆா்ப்பாட்டத்தில் மாநில அமைப்புச் செயலா்கள் ரத்தினவேல், வளா்மதி, முன்னாள் அமைச்சா்கள் கு.ப. கிருஷ்ணன், என்.ஆா்.சிவபதி, அண்ணாவி, பூனாட்சி, கே.கே. பாலசுப்பிரமணியன், மாநில எம்.ஜி.ஆா்.இளைஞரணி இணைச் செயலா் சீனிவாசன், ஆவின் தலைவா் காா்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராஜ், சந்திரசேகா், பரமேஸ்வரி, சின்னதம்பி, இந்திரா காந்தி, பிரின்ஸ் தங்கவேல், எஸ்.எம்.பாலன், மல்லிகா சின்னதம்பி மற்றும் பகுதி செயலா்கள், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...