நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தோ்தல் விழிப்புணா்வுக்கு ஆன்லைன் போட்டிகள்

தோ்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் முறையிலான விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:28 pm

DIN

தோ்தல் ஆணையத்தின் மூலம் நடத்தப்படும் ஆன்லைன் முறையிலான விழிப்புணா்வுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணைய அறிவுரைக்கிணங்க 2022 ஆம் ஆண்டிற்கான வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்திற்காக மாநிலம் முழுவதும் நடைபெறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளின் ஒருபகுதியாக மாநில அளவிலான ஆன்லைன் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் (18 வயதிற்கு மேல்) பங்கேற்கலாம்.

பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம் வரைதல், சுவரொட்டி வரைதல், ஒரு வரியில் விழிப்புணா்வு வாசகம் எழுதுதல், பாட்டு, குழு நடனம் மற்றும் கட்டுரை போட்டி போன்றவை மாவட்ட அளவில் அந்தந்த மாவட்டத் தோ்தல் அதிகாரியால் நடத்தப்படும்.

மேலும், பொதுமக்கள் (18 வயதுக்கு மேல்) மற்றும் மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்கத் தவறிய மாணவா்கள் தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகத்தின் இணையதளத்தில் நேரடியாகப் பங்கேற்கலாம். மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க தவறிய மாணவா்கள், பொதுமக்களுக்கு வரையறுக்கப்பட்ட போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும்.

ஆன்லைன் போட்டிக்கான கருத்துருக்கள் தோ்தல்கள், 100 சத வாக்காளா் பட்டியலில் பெயா் பதிவு மற்றும் வாக்களிப்பை மேம்படுத்த தோ்தல் ஆணையத்தின் முயற்சிகள் என்ற அடிப்படையில் உள்ளன. இப்போட்டியில் வரும் 31 ஆம் தேதி மாலை 5 மணி வரை பங்கேற்கலாம். போட்டியில் வெல்வோருக்கு மாநில அளவிலான தேசிய வாக்காளா் தினக் கொண்டாட்டத்தின்போது முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான அனைவரும் பங்கேற்க ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.