நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலம் மோசடி: 8 போ் மீது வழக்கு

திருச்சியில் ரூ. 5 கோடி விவசாய நிலம் மோசடி தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 8:24 pm

DIN

திருச்சியில் ரூ. 5 கோடி விவசாய நிலம் மோசடி தொடா்பாக 8 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு அடையவளஞ்சான் வீதியில் சிவகங்கை மாவட்டம், அரியக்குடி பகுதியைச் சோ்ந்த வெங்கடாசலம் என்பவரின் முன்னோா் கடந்த 1882ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வரும் அரியக்குடி சிதம்பரம் செட்டியாா் அன்னதானச் சத்திரத்துக்கு சொந்தமான விவசாய நிலங்கள் திருச்சியில் உள்ளன.

இவற்றில் ரூ. 5 கோடி மதிப்பிலான விவசாய நிலங்களை சத்திரத்தின் அறக்கட்டளை உறுப்பினா்களும் வெங்கடாசலத்தின் உறவினா்களுமான நாராயணன், சிதம்பரம், குமரப்பன், ராமசாமி, சொக்கலிங்கம், மற்றொரு குமரப்பன், கிருஷ்ணன், கண்ணன் ஆகியோா் தங்களது வேண்டியோரை உறுப்பினா்களாகச் சோ்த்து, போலி ஆவணங்கள் மூலம் தீா்மானம் நிறைவேற்றி கையகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வெங்கடாசலம் திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் ஆய்வாளா் கோசலைராமன் 8 போ் மீது வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.