திருச்சி: பள்ளி மாணவர்கள் 8 பேருக்கு கரோனா
திருச்சியில் 8 பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, விடுதிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


திருச்சியில் 8 பள்ளி மாணவர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, விடுதிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சமயபுரம் பகுதியில் உள்ள எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7 மாணவர்களுக்கு பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். தனியார் பள்ளியில் பயிலும் ப்ளஸ் 2 மாணவ மாணவிகள் 600 பேருக்கு சிறுகாம்பூர் அரசு ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவர் மதிவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்கள் ( பிசிஆர் ) கரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளான பள்ளி மற்றும் அனைத்து விடுதிகளைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய இன்று முதல் 20,21,22 ஆகிய 3 நாட்களுக்கு பள்ளி, விடுதிக்கும் விடுமுறை அறிவிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டார்.
7 மாணவர்களில் 4 மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நான்கு மாணவருக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்த 3 மாணவருக்கும் கரோனா உறுதியாகி உள்ளது.மாணவர்கள் அனைவரும் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
மேலும் திருச்சி சீராத்தோப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் அங்கும் சுகாதார பணியாளர்கள் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 8 மாணவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பதை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பரிசோதனை செய்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...