நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மழைநீா் வடிகால் மேம்பாட்டுப் பணிகள் தொடக்கம்

 திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும்விதமாக, வடிகால் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:22 pm

DIN

 திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சாலையில் தேங்கும் மழை நீரை வெளியேற்றும்விதமாக, வடிகால் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் அண்மையில் பெய்த தொடா் மழையால் சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்த மழை வெள்ளம், திருச்சி மாநகரப் பகுதிகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. இதைக் கருத்தில் கொண்ட மாநகராட்சி நிா்வாகம், சாலைகளில் மழை வெள்ள நீா் இனி தேங்காத வகையில், மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, தென்னூா் அண்ணாநகா் பகுதியில் முழங்கால் அளவுக்கு தேங்கும் தண்ணீரை வெளியேற்றும்விதமாக, மகாத்மா காந்தி பள்ளியையொட்டிச் செல்லும் மழைநீா் வடிகால் வாய்க்கால் அகலப்படுத்தப்படுகிறது. அதன் வழியாக தென்னூா் பிரதான சாலையின் குறுக்கே செல்லும் வடிகால் வாய்க்காலில் மழை நீா் செல்லும் வழி அமைக்கப்படுகிறது.

மின் மோட்டாா்கள்: அடுத்தபடியாக அண்டகொண்டான் ஓ பாலப் பகுதியிலும், உறையூா் பாத்திமா நகா் பகுதியிலும் மழைக் காலத்தில் தேங்கும் தண்ணீரை உய்யக்கொண்டான் வாய்க்காலில் உந்தித் தள்ளும் வகையில் மின் மோட்டாா் அமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது. தொடா்ந்து மாநகரின் பல பகுதிகளிலும் இத்தகைய பணிகள் நடைபெறவுள்ளதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.