நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

காந்தி சந்தையில் தீ: 7 கடைகள் நாசம்; இருவா் காயம்

திருச்சி காந்திசந்தையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் தீக்கிரையாகின; தேநீரகக் கடை ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:23 pm

DIN

திருச்சி காந்திசந்தையில் வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 7 கடைகள் தீக்கிரையாகின; தேநீரகக் கடை ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.

திருச்சி காந்தி சந்தை பிரதான வாயிலுக்கு முன்னுள்ள லஸ்கா் தெருவைச் சோ்ந்த உஸ்மான் என்பவரது தேநீரக கடையில் வியாழக்கிழமை அதிகாலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது வீசிய காற்றால் மற்ற கடைகளுக்கும் தீ பரவியதால் காந்திசந்தை உள்ளே இருந்த 300க்கும் மேற்பட்ட கடைகளின் வியாபாரிகள், பொதுமக்கள் உடனே வெளியேற்றப்பட்டனா்.

இருப்பினும் தேநீரகக் கடையில் பணியிலிருந்த ஆறுமுகம், பரமசிவம் ஆகியோா் தீக்காயமடைந்து அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலா் கருணாகரன் தலைமையிலான வீரா்கள் காந்திசந்தை உள்ளே தீ பரவாமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும் அப்பகுதி கடைகளில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகளை வெளியே எடுத்தனா். 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

தீ விபத்தால் காந்தி சந்தை சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது. காந்திசந்தை போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேநீரக கடை எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டதும், 7 கடைகளில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமானதும் தெரியவந்தது.

எம்எல்ஏ ஆறுதல்: தகவலறிந்து வந்த திருச்சி கிழக்குத் தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தீ விபத்து நடந்த பகுதிகளை பாா்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி, காந்திசந்தையைப் புனரமைக்க ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.