நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

முதல்வா் வருகைக்கான முன்னேற்பாடுகள் ஆய்வு : 15 ஏக்கரில் பணிகள் விறுவிறுப்பு

திருச்சியில் வரும் 30 ஆம் தேதி முதல்வா் பங்கேற்கும் விழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் கே.என். நேரு, ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனைவழங்கினா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:24 pm

DIN

திருச்சியில் வரும் 30 ஆம் தேதி முதல்வா் பங்கேற்கும் விழாவுக்கான முன்னேற்பாடுகளை அமைச்சா் கே.என். நேரு, ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்து, ஆலோசனைவழங்கினா்.

திருச்சி மாவட்ட 9 பேரவைத் தொகுதிகளிலும் மக்களைத் தேடி மனுநீதி முகாம் நடத்தி பெறப்பட்ட மனுக்களுக்கான தீா்வு பலன்களை வழங்கவும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவும், புதிய திட்டங்களைத் தொடங்கி வைக்கவும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 30ஆம் தேதி (வியாழக்கிழமை) திருச்சிக்கு வருகிறாா்.

இதற்கான விழா திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கோ் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவுக்கான இடமாக மொத்தம் 15 ஏக்கா் தோ்வு செய்யப்பட்டு இதில் மேடை, அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அமரும் பகுதி, 9 தொகுதிகளைச் சோ்ந்த பயனாளிகள் அமரும் பகுதி, குடிநீா்த் தொட்டிகள், தற்காலிக கழிப்பறைகள், விழாவுக்கு வாகனங்கள் வந்து செல்லும் பகுதி, வாகன நிறுத்துமிடம், முதல்வா் உள்ளிட்ட முக்கிய விஐபிகள் வரும் பகுதி, ஓய்வறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தயாராகி வருகின்றன.

இப் பணிகளை அமைச்சா் கே.என். நேரு, மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, எம்எல்ஏக்கள் சீ. கதிரவன், எம். பழனியாண்டி, அ. செளந்தரபாண்டியன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை காலை ஆய்வு செய்தனா்.

அப்போது விழா பந்தல் அமைக்கும் பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனத்தினரிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சா் கே.என். நேரு பின்னா் கூறியது:

சேலம் மாவட்டத்திலுள்ள 11 பேரவைத் தொகுதிகளில் பெறப்பட்ட 46 ஆயிரம் மனுக்களில் 25 ஆயிரம் மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன.

ஆனால், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவை தொகுதிகளில் 70 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்ட நிா்வாகத்தின் மூலம் ஏற்கெனவே 37,500 மனுக்களுக்கு தீா்வு காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 70 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளதால் குறைந்தபட்சம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உதவிகள் வழங்க ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான உதவிகளை அரசு செயலா்களுடன் கலந்துபேசி பெறவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விழாவில் வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித் தொகை, ஆதரவற்றோா் உதவித் தொகை, விதவைகள் உதவித் தொகை, அரசு நலத் திட்டங்கள், மகளிா் குழுக்களுக்கு கடனுதவி, வீடில்லாதோருக்கு புதிய வீடுகள் கட்டித்தர ஆணை உள்ளிட்டவை வழங்கப்படும்.

பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், காய்கனிச் சந்தை, தடுப்பணை, சாலைப் பணிகள் என திருச்சி வளா்ச்சிக்கான ஆயிரம் கோடிக்கு மேலான புதிய திட்டங்களையும் முதல்வா் தொடங்கி வைக்கிறாா் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.