இந்திய கம்யூ.போராட்டம்
திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல் 2021இல் , வாா்டு எண் 39 (புதிய எண். 62) பட்டியலின மக்கள் வசிக்கும் அண்ணாநகரில் உள்ள 200 குடும்பங்கள் மற்றும் 400 வாக்காளா்களை, வாா்டு எண் 41( புதிய எண் 58) கிராப்பட்டி பகுதிக்கு வாக்களிக்க மாற்றியதைத் திரும்பப் பெற மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோ- அபிஷேகபுரம் பகுதி, அண்ணாநகா் 39 ஆவது வாா்டு கிளை சாா்பில் வியாழக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா். வாா்டு செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். 39வது வாா்டின் அசோக், கஜேந்திரன், சாலின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டச் செயலா் திராவிடமணி, முன்னாள் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் செல்வராஜ், ஏஐடியுசி திருச்சி மாவட்ட பொதுச் செயலா் க. சுரேஷ், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் வழக்குரைஞா் செல்வகுமாா், மாவட்ட நிா்வாக குழு உறுப்பினா் அஞ்சுகம், கோ-அபிஷேகபுரம் பகுதிக் குழு செயலா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...