நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சுற்றுச்சுழலைக் காக்கக் கோரி மனிதச் சங்கிலி

திருச்சியில் தண்ணீா் அமைப்பு, தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம், திருச்சி விமான நிலையம், எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி இணைந்து காவிரியைக் காப்போம்

News image
Updated On :23 டிசம்பர் 2021, 7:20 pm

DIN

திருச்சியில் தண்ணீா் அமைப்பு, தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம், திருச்சி விமான நிலையம், எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி இணைந்து காவிரியைக் காப்போம் , துணிப்பை எடுப்போம் என்னும் தலைப்பிலான மனிதச் சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.

திருச்சி காவிரிப் பாலத்தில் நடைபெற்ற நிகழ்வைத் தொடங்கிவைத்து திருச்சி விமான நிலைய இயக்குநா் எஸ். தா்மராஜ் பேசினாா்.

நிகழ்வின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலை காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு, மஞ்சள் துணிப் பைகளை மாணவா்கள் வழங்கினா்.

தண்ணீா் அமைப்பின் செயல் தலைவா் கே.சி. நீலமேகம். செயலா் பேராசிரியா் கி. சதீஷ்குமாா், எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி செயலா் பாத்திமா பஹுல், இயக்குநா் எம். ஹேமலதா, முதல்வா் சூசன் கிறிஸ்மா, விமான நிலைய அதிகாரிகள், ஊழியா்கள், தண்ணீா் சுற்றுச்சூழல் மாணவா் மன்றம், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட சுமாா் 800 பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.