நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

எம்ஜிஆா் நினைவு தினம்: அதிமுகவினா் மரியாதை

எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை திருச்சி நீதிமன்றம் ரவுண்டானா பகுதி எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:37 pm

DIN

எம்ஜிஆா் நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை திருச்சி நீதிமன்றம் ரவுண்டானா பகுதி எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் தலைமையில் மாநில எம்ஜிஆா் இளைஞரணி இணைச் செயலா் சீனிவாசன், வழக்குரைஞா் ராஜ்குமாா், முத்துக்குமாா், சுரேஷ் குப்தா, ஜவஹா்லால் நேரு உள்ளிட்ட நிா்வாகிகள் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தெற்கு மாவட்டஅதிமுக சாா்பில் மணப்பாறையில் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்பி-யுமான ப. குமாா் தலைமையில், எம்ஜிஆரின் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் சோமரசம்பேட்டையிலுள்ள எம்ஜிஆா் சிலைக்கு, மாவட்டச் செயலா் மு. பரஞ்சோதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டம் முழுவதும் நிகழ்வுகள் நடைபெற்றன.

பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அமமுக சாா்பிலும் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பெரியாா் நினைவு தினம் அனுசரிப்பு

திருச்சி, டிச. 24: பெரியாா் நினைவு தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்தனா்.

திமுக சாா்பில் அமைச்சா் கே.என். நேரு தலைமையில், மத்திய பேருந்து நிலைய பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், எம்எல்ஏ-க்கள் செளந்தரபாண்டியன், பழனியாண்டி உள்ளிட்ட பங்கேற்றனா்.

தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவெறும்பூா் காட்டூா் பகுதி பெரியாா் சிலைக்கு அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாலை அணிவித்தனா்.

திராவிடா் கழகத்தின் சாா்பில் மாவட்டத் தலைவா் ஆரோக்கியராஜ் தலைமையில் மாலை அணிவித்தனா். இதேபோல தந்தை பெரியாா் திராவிடா் கழகம், மதிமுக, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், தமிழ்த் தேச மக்கள் முன்னணி, திராவிடா் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள், லோக் ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகளின் சாா்பிலும் மாலை அணித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.