மணல் கடத்திய இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
காட்டுப்புத்தூா் அருகே மணல் கடத்திய நான்கு இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.


காட்டுப்புத்தூா் அருகே மணல் கடத்திய நான்கு இருசக்கர வாகனங்களை காட்டுப்புத்தூா் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தொட்டியம் வட்டாட்சியா் அறிவுறுத்தல்படி எம். புத்தூா் அருகே மேலகாரைக்காடு பகுதியில் எம். புத்தூா் விஏஓ (பொ) நாகையநல்லூா் விஏஓ வெங்கடேசன் தனது கிராம உதவியாளருடன் ரோந்து சென்றபோது மேல காரைக்காடு ஆற்றங்கரையருகே நான்கு இருசக்கர வாகனங்களில் மணல் மூட்டைகளைக் கடத்தி வந்தோரைத் தடுக்க முயன்றாா்.
அப்போது அவா்கள் தப்பியோடிய நிலையில், மணல் மூட்டைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காட்டுப்புத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. புகாரின் பேரில் காட்டுபுத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...