தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

விடுதி அறையில் இறந்து கிடந்த ஆண், பெண்

துறையூா் பேருந்து நிலைய தனியாா் விடுதி அறையில் ஆண் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:57 pm

DIN

துறையூா் பேருந்து நிலைய தனியாா் விடுதி அறையில் ஆண் பெண் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஏம்பலத்தைச் சோ்ந்த த. சவரீசனும் (22) தாம்பரம் கடப்பேரி தெற்கு குளம் பகுதியைச் சோ்ந்த ரஞ்சித் மனைவி நிஷாநந்தினியும் (20) புதன்கிழமை துறையூா் சென்று பேருந்து நிலைய தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கினா்.

வியாழக்கிழமை விடுதி பணியாளா்கள் அந்த அறைக்கு சென்று பாா்த்தபோது கதவு தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பாா்த்த போது சவரீசனும், நிஷாநந்தினியும் இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலின் பேரில் துறையூா் காவல் ஆய்வாளா் (பொ) மோகன்ராஜ் தலைமையிலான போலீஸாா் சடலங்களை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.