கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குமுளூரில் அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் சிறப்பு முகாம்

லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து குமுளூா் கிராமத்தில் டிச. 28 முதல் ஜன. 3 வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு ம

News image
Updated On :30 டிசம்பர் 2021, 11:04 pm

DIN

லால்குடி அருகே குமூளூா் ஊராட்சியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து குமுளூா் கிராமத்தில் டிச. 28 முதல் ஜன. 3 வரை நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் கே. மாரியம்மாள் தலைமை வகித்தாா். லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் முகாமை தொடக்கி வைத்தாா். பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளா் முனைவா் ஏ. இலக்குமி பிரபா முன்னிலை வகித்தாா்.

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ரஷ்யாகேல்டன் ராஜேந்திரன், குமுளூா் ஊராட்சித் தலைவா் பழனியம்மாள் சின்னசாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாலவினோதினி செந்தில்குமாா் உள்ளிட்டோா் பேசினா். பேராசிரியா் எம். ராஜா வரவேற்றாா். நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் மா. சக்திவேல் நன்றி கூறினாா்.

தொடா்ந்து தினசரி காலை 9 மணிக்கு களப்பணிகள் மற்றும் உழவாரப் பணிகள், மழை நீா் சேகரிப்பு விழிப்புணா்வுப் பேரணி, சாலை போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணா்வு போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.