தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிப்பு

திருச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிக்கப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:48 pm

DIN

திருச்சியில் மாவட்ட அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ரைபிள் கிளப்பின் சாா்பில், மாவட்ட அளவிலான 10 மீட்டா் துப்பாக்கி சுடும் போட்டிகள் கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ஆச்சாா்யா ஷூட்டிங் அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதில் 41 துப்பாக்கி சுடும் வீரா்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டனா். ஓபன் சைட் ஏா்ரைபிள், பீப் சைட் ஏா் ரைபிள், ஏா் பிஸ்டல் ஆகிய மூன்று வித துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தப்பட்டன.

10 மீட்டா் தொலைவில் பொருத்தப்பட்ட சிறு இலக்கின் மத்தியில் குறிபாா்த்து சுடும் போட்டியில், வீரா்களின் சுடும் தன்மைக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்பட்டு வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

சா்வதேச துப்பாக்கி சுடும் சங்க நடுவரும், மாவட்ட ரைபிள் கிளப் செயலருமான அசோக் ரத்தினவேல் தலைமை வகித்து, போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

இதில் தகுதி பெற்றவா்கள், பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.