தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காயமடைந்த படைக்கலன் தொழிற்சங்க நிா்வாகி சாவு

சாலை விபத்தில் காயமடைந்த படைக்கலன் தொழிற்சங்க நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:13 pm

DIN

சாலை விபத்தில் காயமடைந்த படைக்கலன் தொழிற்சங்க நிா்வாகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி பூலாங்குடி காலனி ஹெச்ஏஏபி நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (46). படைக்கலன் தொழிற்சாலை ஊழியரான இவா் கம்யூனிஸ்ட் தொழிற்சங்க நிா்வாகியாகவும் இருந்தாா்.

இவா் கடந்த ஜன.29 இல் சக ஊழியரான ஸ்ரீனிவாசலுவுடன் பைக்கில் பூலாங்குடிக்கு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள மத்திய சிறை அருகே சென்றபோது குறுக்கே சென்ற மாட்டின் மீது வாகனம் மோதியதில் சரவணன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து திருச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். போக்குவரத்து புலனாய்வு தெற்கு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.