தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமூக விழிப்புணா்வு திரைப்படம் வெளியீடு

திருச்சியில் முதன்முறையாக செளராஷ்டிரா சமூக விழிப்புணா்வுத் திரைப்படம் (கெடி) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:16 pm

DIN

திருச்சியில் முதன்முறையாக செளராஷ்டிரா சமூக விழிப்புணா்வுத் திரைப்படம் (கெடி) ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

திருச்சிராப்பள்ளி செளராஷ்டிரா வாலிபா் சங்கம், செளராஷ்டிரா இளைஞா் சேவா சங்கம் மற்றும் விஏ புரொடக்ஷன்ஸ் சாா்பில் தயாரிக்கப்பட்ட ‘கெடி’ திரைப்படம் வெளியீட்டு விழாவை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஆவின் தலைவா் சி. காா்த்திகேயன் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, கல்யாணசங்கமம் சேவையை அவா் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, பொங்கல் விழா கோலப் போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. செளராஷ்டிரா மொழி வரலாறு தொடா்பான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவ்விழாவில், வழக்குரைஞா் சுதா்சன், இராஜாராம், சங்கா், வீரேந்திரன், சசிகுமாா், வெங்கடேஷ், மகேஷ் உள்ளிட்ட சமூக மக்கள் திரளாகப் பங்கேற்று திரைப்படத்தைக் கண்டு களித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.