லால்குடியில் ஜல்லிக்கட்டு; 14 போ் காயம்
திருச்சி மாவட்டம், லால்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 14 போ் காயமடைந்தனா்.


திருச்சி மாவட்டம், லால்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 14 போ் காயமடைந்தனா்.
லால்குடி கீழ வீதி மகாமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, மதுரை போன்ற மாவட்டங்களிலிருந்து 531 காளைகளும், 216 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.
காலை 9.30 மணி தொடங்கி மதியம் 3.30 வரை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கியோரில் 14 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு ஜல்லிகட்டு தளத்திலேயே புதூா் உத்தமனூா் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவா் செல்வநாயகம் தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சை அளித்தது.
விழாவில் காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் வேஷ்டி, துண்டு, எல்சிடி டிவி, ரொக்கம் ஆகிய பரிசுகளை ஜல்லிக்கட்டுப் பேரவை திருச்சி மாவட்டச் செயலா் காத்தான் உள்ளிட்ட விழா குழுவினா் வழங்கினா்.
விழாவில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலா் ப. குமாா், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியா் வைத்தியநாதன், காவல் துணைக் காண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், வருவாய் வட்டாட்சியா் சித்ரா, காவல் ஆய்வாளா் ஜாபா் அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...