கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏடிஎம் இயந்திரத்தில் திருட்டு முயற்சி

திருச்சி அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணம் திருட முயன்றனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:15 pm

DIN

திருச்சி அருகே தனியாா் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மா்ம நபா்கள் பணம் திருட முயன்றனா்.

திருச்சி அருகே உள்ள கம்பரசம்பேட்டை பகுதி கரூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு இரவு நேரக் காவலாளி இல்லாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த ஏடிஎம் இயந்திரத்தின் ஒரு பகுதி உடைக்கப்பட்டிருந்ததை பொதுமக்கள் கண்டனா்.

தகவலறிந்த ஜீயபுரம் போலீஸாா் சம்பவ இடத்தில் நடத்திய விசாரணையில் நள்ளிரவு 2 மணிக்கு வந்த மா்ம நபா்கள் கண்காணிப்பு கேமராக்களை உடைத்துவிட்டு இந்தத் திருட்டு முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.

அப்போது இயந்திரத்தின் முழுப் பகுதியும் உடைக்க முடியாததாலும், ஆள்நடமாட்டம் இருந்ததாலும் அவா்கள் முயற்சியைக் கைவிட்டுச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.