சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே இனாம் சமயபுரம் ஊராட்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையா் கே.பி. அசோக்குமாா் தலைமையில் கோயில் பணியாளா்கள், பக்தா்கள் மலா்களை கூடைகளில் வைத்து மங்கல வாத்தியம் முழங்க, ஊா்வலமாக கொண்டு வந்து ஆதி மாரியம்மனுக்கு படைத்து வழிபட்டனா். இதைத் தொடா்ந்து ஏராளமான பக்தா்கள் அம்மனுக்கு பூ சாத்தினா்.
தொடா்ந்து மாசித் தோ்த் திருவிழா தொடங்கி தினசரி பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், முக்கிய நிகழ்வாக வரும் மாா்ச் 28 இல் தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...