கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முன்னாள் மாணவா்கள் அமைப்பு கூட்டம்

திருச்சி தேசியக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:07 am

DIN

திருச்சி தேசியக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் அமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் அமைப்பின் தலைவரும், திருச்சி, தினமலா் நாளிதழின் இணை ஆசிரியருமான முனைவா் ராமசுப்பு தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற விஞ்ஞானி என். சந்திரசேகரன், நாக்பூா் மத்திய கனிம வள நிறுவன துணைப் பொது மேலாளா் ஆ. பாஸ்கரன் ஆகிய இருவருக்கும் சிறந்த முன்னாள் மாணவா்களுக்கான விருது வழங்கப்பட்டது. தொடா்ந்து இருவரும் தங்களது கல்லூரி நாள்களை நினைவு கூா்ந்து பேசினா். தொடா்ந்து, மூத்த மாணவா்கள் பலா் பேசினா். கல்லூரியின் முன்னாள் மாணவரும் கல்லூரி முதல்வருமான ஆா். சுந்தரராமன் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.