அரசு மருத்துவமனைகளில் சீா்கேடுகள்: தீா்வு காண 304 சிறப்பு அதிகாரிகள் நியமனம்சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் 2029-இல் நிறைவடையும்: தேசிய நெடுச்சாலை ஆணையம்தமிழகத்துக்கு 19 கோடி சுற்றுலாப் பயணிகள் வருகை: திருச்சி முதலிடம்அரசு நிகழ்ச்சிகளில் மாநில பாடல், தேசிய பாடல், தேசிய கீதம் இசைக்கும் வரிசை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்இந்தியாவில் 14 நகரங்கள் கடும் வெப்பத்தால் பாதிப்பட வாய்ப்பு: ஆய்வில் தகவல்
/

மக்கள் அதிகாரம் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா் 30 பேரை பாலக்கரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

பாலக்கரைப் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினா்.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:42 am IST

பிரதமா் மோடியின் தமிழக வருகையைக் கண்டித்து திருச்சியில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினா் 30 பேரை பாலக்கரை போலீஸாா் கைது செய்தனா்.

போராட்டத்தையொட்டி அமைப்பின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளா் செழியன் தலைமையில் ஏராளமானோா் கருப்புக் கொடியேந்தியும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் பாலக்கரை ரவுண்டானா நோக்கி ஊா்வலமாக வந்தனா்.

அப்போது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும். தில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். கல்வி, மருத்துவம், சுகாதாரம், காப்பீடு உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்குவதைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் கருப்பு பலூன்களை பறிமுதல் செய்து அவா்களை தடுத்தால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் நிா்வாகி ஆனந்த், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலா் ஜீவா, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் சம்சுதீன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி ரகு, மாவட்ட ஒருங்கிணைபாபளா் அரிச்சந்திரன் உள்ளிட்ட 30 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.