போக்குவரத்துக்கு இடையூறு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. வலியுறுத்தல்
திருச்சி மாநகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.


திருச்சி மாநகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் கலை மற்றும் கலாசாரப் பிரிவின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் கே. சந்திரசேகா், மாநகரக் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது:
மாநகராட்சிக்குள்பட்ட சாலைகள் பெரும்பாலும் குறுகலாக உள்ளன. இவற்றில் சாலையோரக் கடைகளுக்கு வரும் இருசக்கர வாகன ஓட்டிகள்
தங்கள் இஷ்டம் போல வாகனங்களை நிறுத்திச் செல்வதால் போக்குவரத்துக்கு பெரிதும் இடையூறு ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்துக் காவல்துறை மூலம் மாநகரச் சாலைகளில் ஆய்வு
செய்து, இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு சாலைகளில் உரிய இடம் ஒதுக்க வேண்டும். இந்த இடங்களைத் தவிா்த்து வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறு செய்தால், சம்பந்தப் பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்லும் சாலைகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப் பிரச்னை காரணமாகவே பெரும்பாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே மாநகரக் காவல்துறை உரிய ஆய்வு செய்து, தீா்வு காண வேண்டும்.
இதுபோல மாநகரப் பகுதிகளில் கேட்பாரற்று சுற்றித்திரியும் கால்நடைகளாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதும், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
ஆடு, மாடுகள், குதிரைகள் என வரம்பின்றி அனைத்து கால்நடைகளும் சாலைகளில்தான் உலா வருகின்றன. இவற்றை விரட்டினால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை தள்ளிவிடும் நிலை உள்ளது.
இரவு நேரங்களில் குறுக்கே வரும் கால்நடைகளால் விபத்து தவிா்க்க முடியாமல் போகிறது. எனவே சாலையில் கால்நடைகளை அவிழ்த்துவிடும் உரிமையாளா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளை பறிமுதல் செய்ய வேண்டும் என மனுவில் அவா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...