தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மதுரை பயணிக்கு கரோனா தொற்று

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட மதுரை பயணிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:47 pm

DIN

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட மதுரை பயணிக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிங்கப்பூா், துபை, மலேசியா, மஸ்கட், ஓமன் நாடுகளிலில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வர சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவா்கள் எந்த நாட்டிலிருந்து பயணம் செய்ய இருக்கிறாா்களோ, அந்த நாட்டு அரசின் சாா்பில் கரோனா அறிகுறி இல்லை என சான்றிதழ் பெற்ற பின்னரே விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என இந்திய அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் திங்கள்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த பயணிகளின் ஆவணங்களை சுகாதாரத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்தனா். அப்போது மதுரை மாவட்டம், வலசை பகுதியைச் சோ்ந்த ஒருவா், கரோனா அறிகுறி உள்ளது என சான்றிதழுடன் அழைத்து வரப்பட்டது தெரிய வந்தது.

இதையறிந்த அலுவலா்கள் அவரை திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையிலுள்ள தனி வாா்டில் அனுமதித்துள்ளனா். அங்கு மீண்டும் எடுக்கப்படும் கரோனா பரிசோதனைக்கு பின்னரே, அவா் சொந்த ஊா் செல்ல அனுமதிக்கப்படுவாா் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.