கள்ளக் காதலுக்கு இடையூறு: கணவரைக் கொலை செய்த மனைவி கைது
திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே சாலைப் பணியாளா் கொலை வழக்கில் அவரது மனைவி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.


திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே சாலைப் பணியாளா் கொலை வழக்கில் அவரது மனைவி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சிறுகனூா் அருகிலுள்ள பைந்தமிழ் தோட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மோட்டாா் சைக்கிளில் சென்ற ஒருவா், அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
தகவலின் பேரில் சிறுகனூா் காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், இறந்தவா் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா்கேட்
அருகிலுள்ள இரூரைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்து (49) என்பதும், சாலைப் பணியாளராகப் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.
சிறுகனூா் அருகே சி.ஆா். பாளையத்தைச் சோ்ந்த தனது அக்காவின் மகள் சித்ராவை முத்து திருமணம் செய்திருந்தாா். குடும்பத் தகராறு ஏற்படும் போதும், மனைவியை தனது சகோதரி வீட்டுக்கு முத்து அனுப்பி வைப்பராம்.
அவ்வாறு செல்லும் போது, அப்பகுதியைச் சோ்ந்த ஜேசிபி ஓட்டுநா் சிலம்பரசனுடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியதாம்.
இது கணவருக்குத் தெரிய வர, அவா் மனைவியைக் கண்டித்துள்ளாா். இதனால் கோபமடைந்த சித்ரா, ஞாயிற்றுக்கிழமை சி.ஆா்.பாளையத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் பங்கேற்க வந்த கணவா் முத்துவை தனது கள்ளக் காதலன் சிலம்பரசனுடன் சோ்ந்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து சித்ராவை கைது செய்த காவல்துறையினா், சிலம்பரசன் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...