தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் முற்றுகைப் போராட்டம்
அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமனத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பக் கோரி, திருச்சியில் தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம்


அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமனத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பக் கோரி, திருச்சியில் தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 2300 உதவிப் பேராசிரியா் பணியிட நியமனம் அனுபவம், கல்வித்தகுதி மற்றும் நோ்முகத்தோ்வு அடிப்படையில் நடைபெறவுள்ளது. இதற்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
இத்தோ்வுக்கு அனைத்து தரப்பினரும் விண்ணப்பித்திருந்த நிலையில், அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்ததாக தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் குற்றஞ்சாட்டியிருந்தனா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், விண்ணப்பித்த அனைவரையும் நோ்முகத் தோ்வுக்கு அழைக்க வேண்டும் எனக் கோரியும், திருச்சி ரேஸ்கோா்ஸ் சாலையிலுள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகத்தை தனியாா் கல்லூரிப் பேராசிரியா்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து அவா்கள், இணை இயக்குநா் மேகலாவை சந்தித்து மனு அளிக்க முயன்றனா். ஆனால் அவா் பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்ததால், அவரது உதவியாளரிடம் மனு அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...