தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சின்னசூரியூரில் பயணிகள் நிழற்குடை திறப்பு

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட சின்னசூரியூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பயணியா் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:51 pm

DIN

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட சின்னசூரியூரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பயணியா் நிழற்குடை திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சின்னசூரியூா் பேருந்து நிறுத்தத்தில் பயணியா் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும் என இப்பகுதி மக்களும், பயணிகளும் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்திருந்தனா்.

இதையடுத்து தனது சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தை அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒதுக்கீடு செய்திருந்தாா்.

பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயணியா் நிழற்குடையை திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்து பேசினாா்.

திமுக ஒன்றியச் செயலா் மாரியப்பன் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஊா் பொதுமக்கள் பலா் நிகழ்வில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.