தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உருமு தனலெட்சுமி கல்லூரியில் தாய்மொழி தின விழா

உருமு தனலெட்சுமி கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:58 pm

DIN

உருமு தனலெட்சுமி கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் இ.ஆா். ரவிச்சந்திரன் தலைமை வகித்து, அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா் அ. சிவபெருமான் எழுதிய உலகத்தாய்மொழி நாளில் தமிழை நேசிப்போம் என்ற நூலை வெளியிட்டாா். அதை பெரியாா் ஈவேரா கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவா் கா. வாசுதேவன், ஜமால் முகமது கல்லூரி தமிழாய்வுத் துறைத் தலைவா் மு. செல்வி ஆகியோா் பெற்றனா்.

பேராசிரியா் நாராயணநம்பி வாழ்த்தினாா். உலகத் தாய்மொழிநாள் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரி மாணவி பெ. பத்மஸ்ரீ, இரண்டாம் பரிசை உருமு தனலெட்சுமி கல்லூரி திவ்யபாரதி பெற்றாா். பேராசிரியா் ந.விஜயசுந்தரி வரவேற்றாா். முனைவா் ஆசிக் ஹமீது நன்றி தெரிவித்தாா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.