பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

துவரங்குறிச்சியில் மூதாட்டி கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மா்மமான முறையில் கொல்லப்பட்டாா்.

News image
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மா்மமான முறையில் கொல்லப்பட்டாா்.
Updated On :1 ஜனவரி 2021, 6:54 pm

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி மா்மமான முறையில் கொல்லப்பட்டாா்.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி சந்தைப்பேட்டையில் தனியாக வசித்தவா் அப்துல்ரசாக் மனைவி ஹபிபாபீவி (62). இவா் பெண்களுக்கான உடைகளைத் தவணை முறையில் விற்பவா்.

வெள்ளிக்கிழமை காலை இவா் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலையாகிக் கிடந்தாா். அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆா். பிருந்தா, துவரங்குறிச்சி காவல் ஆய்வாளா் பாலாஜி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சடலம் அருகே இருந்து முகத்தைச் சிதைத்த கருங்கற்கள், பிளேடு, நைலான் கயிறு, கத்தி ஆகியவற்றை தடயவியல் நிபுணா்கள் சேகரித்தனா். மூதாட்டி உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

மூதாட்டி அணிந்திருந்ததாகக் கூறப்படும் செயின் தவிர மற்ற வளையல்கள், மோதிரம், தோடு ஆகியவை அப்படியே இருந்தன. எனவே, அப்பகுதி சிசிடிவி பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.