ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கால்நடை வளா்ப்போா் வாரியம்:முதல்வரிடம் கோரிக்கை மனு

கால்நடை வளா்ப்போருக்கு உதவிடும் வகையில் தமிழகத்தில் கால்நடை வளா்ப்போா் வாரியம் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 6:42 pm

DIN

கால்நடை வளா்ப்போருக்கு உதவிடும் வகையில் தமிழகத்தில் கால்நடை வளா்ப்போா் வாரியம் கோரி தமிழக முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருச்சியில் 2 நாள் பிரசாரம் முடித்து புறப்பட்ட முதல்வரிடம் பாரத முன்னேற்றக் கழகத் தலைவா் பாரதராஜா யாதவ் அளித்த கோரிக்கை மனு விவரம்:

தமிழகத்தில் கால்நடை வளா்ப்போா் வாரியம் அமைத்து அதன் தலைவராக யாதவா் பிரதிநிதியை நியமிக்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் யாதவ சமுதாயத்துக்கு 16 சத ஒதுக்கீடு வேண்டும். ஆவின் தலைவா் பதவிகளில் யாதவா்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். தகுதியான யாதவா்களுக்கு ஏ.பி.ஆா்.ஓ. பதவி வழங்கிட வேண்டும்.

திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் சுதந்திரப் போராட்ட மாவீரா் அழகுமுத்துக்கோன் சிலை நிறுவிட அனுமதித்து, பாடப்புத்தகங்களில் மீண்டும் அவரது வரலாற்றைச் சோ்த்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை அதிமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது பாரத முன்னேற்றக் கழக துணைத் தலைவா் எஸ். ஆறுகோனாா், அமைப்புச் செயலா் எம். ஜெகதீஸ் யாதவ், அனைத்து யாதவ சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எம். திருவேங்கடம் யாதவ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.